Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம்…. பட்டாசு வெடித்து யானைகளை விரட்டிய வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தோட்டத்திற்குள் புகுந்த அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெள்ளாந்தி பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடையார்கோணம் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து 1200 வாழைகளை பயிரிட்டுள்ளார். கடந்த மாதம் தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் 700 வாழைகளை நாசம் செய்தது. நேற்று முன்தினம் மீண்டும் பால்ராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் 50 தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்தது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 7 காட்டு யானைகளை பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்களைக் கொண்டும் விரட்டி அடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |