தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தீர்த்தபுரம் மேல தெருவில் தியாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவசி கனி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 22-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து 3 பவுன் தங்க நகை, 12,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி சென்றனர்.
இதனையடுத்து தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த தவசி கனி மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.