Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. திடீரென கடித்த பாம்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பாம்பு கடித்து விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுநல்லூர் கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முனுசாமியை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த முனுசாமி வாயில் நுரை தள்ளியபடி  மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சடைந்த அவரது மகன் அருண்பாண்டியன் முனுசாமியை  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |