மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளபட்டி பகுதியில் விவசாயிகளான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய கிணற்றில் இருக்கும் மின் மோட்டாரை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரபு மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பிரபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.