திருநெல்வேலி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் ஊரை சேர்ந்த விவசாயி காஞ்சிப்பெரியவர் மகன் கதிரேசன் . இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவில் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலை வரை வீடு திரும்பாத கதிரேசனுக்கு செல்போன் மூலம் அழைத்தபோது ஒலித்துக்கொண்டே இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு கதிரேசன் பிணமாக கிடந்துள்ளார. இது குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கதிரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.