Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்த மாடு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

சிறுத்தை மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள முந்தை துறை புலிகள் காப்பகம், பாவநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில்  திருப்பதியாபுரம், கோதையாறு, வேம்பையாபுரம்   போன்ற மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில்  ஏராளமான விவசாயிகள்  தங்களது வீடுகளில் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த  ராஜா என்பவர்  தான் வளர்த்து வந்த பசு மாட்டை மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில்  தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிறுத்தை மாட்டை அடித்து கொன்றது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் தடயங்களை சேகரித்தனர். மேலும் சிறுத்தை கடித்து  பலியான மாட்டின்   உரிமையாளருக்கு உரிய இழப்பீடு  வழங்கப்படும் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |