பவர் டில்லர் எந்திரம் ஏறி இறங்கியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி அரசூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் தங்கியிருந்து அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆகாஷ்குமார் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தும் பவர் டில்லர் எந்திரம் மீது அமர்ந்தபடி தோட்டத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆகாஷ்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவர் தலை மீது எந்திரத்தின் டயர் ஏறி இறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆகாஷ் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.