மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லசந்திரன் பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலா தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாலா தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாலா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாலாவின் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.