Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்த இப்படி நாசம் செஞ்சுட்டே…. மனமுடைந்த விவசாயிகள்…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!

நெல்லையில் காட்டு யானை தோட்டத்தினுள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அதிகமான விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இதில் வாழை, தென்னை போன்ற பயிர்களை விவசாயிகள் விதைத்துள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் லக்ஷ்மணன், பால்துறை, பாபு, லிங்கம் ஆகியோர் அவர்களுடைய தோட்டத்தில் வாழை, தென்னை போன்ற பயிர்களை விதைத்துள்ளனர்.

இதனையடுத்து இவரது தோட்டத்தினுள் காட்டு யானை புகுந்து வாழை, தென்னை பயிர்களை நாசம் செய்ததோடு மட்டுமல்லாமல் பனை மரங்களையும் அடியோடு சாய்த்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அப்பகுதிக்கு வரும் காட்டு யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |