Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தோட்ட கலை திட்டங்களில் பயன்பெற இனி இது கட்டாயம்”…? வெளியான தகவல்…!!!!!

தோட்டக்கலை திட்டங்களில் பயன் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறை திட்டங்களில் பயன் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட தோட்டக்கலை துறை இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 2022 – 2023 ஆம் நிதி ஆண்டு முதல் தோட்டக்கலை துறை மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் இணையதள பதிவு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் https:–t horticulture.tn.gov.in-tnhortnet- என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2022 – 2023 வருடத்திற்கு நாகை மாவட்டத்தில் 420 ஹெக்டேர் பரப்பில் மா, கொய்யா,நெல்லி மற்றும் உயர்தர காய்கறி விதைகள் பயிரிட ஐந்து கோடியே 90 லட்சம் நுண்ணீர் பாசனம் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த 46 லட்சத்து 35 ஆயிரம் நிதி பெறப்பட்டிருக்கிறது.

பனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூறு சதவிகித மானியத்தில் பனை விதைகள் மற்றும் 75 சதவீதம் மானியத்தில் பனைமரம் ஏறுவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் பனைமரம் ஏறுவதற்கு சிறந்த எந்திரங்களை கண்டுபிடிப்பவர்கள் மாநில குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு லட்சம் மற்றும் விருது வழங்கப்பட இருக்கிறது. மேற்கண்ட அனைத்து திட்டங்களிலும் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண் தொலைபேசி எண் மற்றும் அடிப்படை விவரங்களை இணைய வழியில் பதிவு செய்து கொள்ள கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயன் பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |