Categories
மாநில செய்திகள்

தோட்ட தொழிலாளி மர்ம மரணம்…. குவிந்து கிடந்த கள்ளநோட்டுகள்….!!!

தோட்டத் தொழிலாளி மர்மமாக இறந்து கிடந்த விவகாரத்தில் விசாரிக்கச் சென்ற இடத்தில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் இளங்கோவன் என்பவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்தார். இவர் அதே தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்த போலீசார் தோட்டத்தின் உரிமையாளர் பாண்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த காரணத்தினால் அவரின் வீட்டில் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தோட்டம் முழுவதும் சோதனையிட்ட போலீசார் 10 லட்சத்துக்கும் அதிகமான 500 ரூபாய் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |