பணம், நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சோளங்குருணி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். அதன்பின் வேலை முடித்து வீடு திரும்பிய செந்தில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்திருந்த 2000 ரூபாய் பணம், ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து செந்தில் பெருங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.