துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை அணியின் சிறப்பான ஆட்டம். சிங்கம் மீண்டும் கர்ஜித்தது. நான்காவது முறையாக ஐபிஎல் பதக்கத்தை தக்க வைத்துக்கொண்ட சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றியை கொண்டாட கேப்டன் மகேந்திர சிங் தோனியை அன்புடன் வரவேற்க சென்னை காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.