Categories
சினிமா தமிழ் சினிமா

தோனியாக மாறிய சிவகார்த்திகேயன்…. ஒப்பீடு செய்த பிரபல இயக்குனர் …!!


இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் சிவகார்த்திகேயனும் தோனியும் ஒரே மாதிரிதான் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பினை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் , முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி நேற்று வெளியிட்டார். திரை பிரபலங்கள் பலரும் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன், ” எங்களை அதிகமாக உற்சாகப்படுத்தியதற்கும், மகிழ்வித்தற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி தோனி.

சீனு ராமசாமியின் டுவிட்டர் பதிவு

 

நீங்கள் எப்பொழுதும் ஒரு அற்புதமான தலைவன் என்பதில் சந்தேகமில்லை. எங்களை ஆச்சரியப்படுத்த பல்வேறு உத்திகளை கையாளுவீர்கள். உங்களின் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிர்க்காக காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இயக்குனர் சீனு ராமசாமி சிவகார்த்திகேயனின் இந்த பதிவை குறிப்பிட்டு கூறியதாவது ” சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை நீங்களும் பலரை மகிழ்வித்து வழிகாட்டியாக இருந்துள்ளீர். நீங்களும் தோனி மாதிரி நண்பர்களுக்கும், புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறீர்கள். நீங்கள் இருவரும் அடிமட்டத்திலிருந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்கள்.” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |