Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் பெருந்தன்மை… U R Great Thala…!!!

ஐபிஎல் போட்டிகள் ரத்தானது தொடர்ந்து அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பத்திரமாக சென்ற பின்புதான் நான் கிளம்புறேன் என்று தோனி கூறியதாக சிஎஸ்கே அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக ஐபிஎல் போட்டி நடத்துவதில் முதலில் இருந்தே சிக்கல் நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியின் வீரர் இரண்டு பேருக்கும், ஹைதராபாத் அணியில் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டியை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் அனைவரும் பத்திரமாக சென்ற பின்னே நான் கிளம்புறேன் என்று தோனி கூறியதாக சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் முதலில் வெளிநாட்டு வீரர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வீடு திரும்ப முன்னுரிமை தருவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கிளம்பிய பிறகு வீடு திரும்பலாம் என அறிவுறுத்திய தோனி, அனைவரும் சென்றபின் கடைசி வீரராக ராஞ்சி கிளம்புகிறார்.

Categories

Tech |