இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி இன்று மதியம் 2 மணிக்கு பேஸ்புக் லைவில் ரசிகர்களை சந்தித்து உற்சாகமான செய்தியை பகிர உள்ளதாக அறிவித்துள்ளது. அவர் ஓய்வு குறித்து அறிவிக்க போகிறாரா, சினிமாத்துறையில் நுழையப்போவதாக அறிவிக்கப் போகிறாரா, இல்லை 2-வது குழந்தை குறித்து அறிவிக்கப் போகிறாரா என பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது என ஏக்கமடைந்த ரசிகர்களுக்கு, தோனியின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சில தகவல்களை பகிர்ந்துகொள்ள இருப்பதாக தோனி குறிப்பிட்டுள்ளதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.