சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கினார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.2 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.1 கோடியும் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் தோனி சிக்ஸ் அடிக்கும் போது நாமே சிக்ஸ் அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ரொனால்டோ கோல் அடித்தால் நாமே கோல் அடித்தது போல உணர்வு ஏற்படுகின்றது. அதைப்போல தான் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.