வருகின்ற 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டிகளுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதில் 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில் பல வீரர்களும் எம்.எஸ்.தோனி தலைமையின் கீழ் விளையாடுவது குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ( வயது 26 ) தான் எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடைய தலைமையின் கீழ் விளையாட ஒரு குழந்தை போல காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது தன்னுடைய தனிப்பட்ட விருப்பமான அணி என்றும் அவர் கூறியுள்ளார். சிஎஸ்கே கேப்டனுடன் ஐ.பி.எல்.லில் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஆனால் தோனியின் அணுகுமுறை மற்றும் அமைதியான நடத்தை சக வீரர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்தியதாக முன்னாள் இந்திய கேப்டனுடன் பலமுறை உரையாடியதாகவும் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா குறிப்பிட்டுள்ளார்.