Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தோனி தான் கிடைக்கல….. “இவரது பயோபிக் படத்திலாவது நான் நடிகனும்”….. மனம் திறந்த விஜய் தேவரகொண்டா..!!

விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

ஆசிக் கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் விரும்பிப்பாக நடைபெற்று வருகிறது. 27ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி.. அதே போல நேற்று முன்தினம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். இதை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் 2 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றிபெற்றது. மேலும் விராட் கோலி, ஜடேஜா இருவரும் 35 ரன்களும், ஹர்திக் பாண்டியா 33 ரன்களும் எடுத்தனர்..

வெற்றிக்கனியை பறிக்க ஹர்திக் பாண்டியா முக்கிய காரணம்.. அவர் கடைசி வரை நின்று அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.. அவருடன் ஜடேஜாவும் நல்ல கம்பெனி கொடுத்தார்.. கடைசியில் 3 பந்துகளில் 6 ரன்கள்  தேவைப்பட, ஆட்டத்தில் பரபரப்பு நிலவ, ஹர்திக் கூலாக சிக்ஸர் அடிக்க, இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 148 ரன்கள் எடுத்து வென்றது. ஹர்திக் 17 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து இருந்தார்.. அதேபோல் பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்ததால் ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இவருக்கு பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை தொடரில் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்திருக்கிறது.

இந்த பரபரப்பான இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண பல பிரபலங்களும் வந்திருந்தனர். அதேபோல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்தார். அவர் உற்சாகமாக இந்த போட்டியை பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில் வர்ணனையாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு உற்சாகமாக பதில் அளித்துள்ளார்.. அவர் கூறியதாவது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க நான் ஆசைப்படுகிறேன்.. தோனியின் பயோபிக் (வாழ்க்கை வரலாறு) படத்தில் நடிக்க நான் ஆசைப்பட்டேன். ஆனால் அதை ஏற்கனவே செய்துவிட்டார் சுஷாந்த் சிங். எனவே நான் இப்போது விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க விருப்பப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் தான் விஜய் தேவர கொண்டா மற்றும் அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான லைகர் படம் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் படு தோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |