2018ஆம் ஆண்டு வெளியானதோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில் பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் சுசா ந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சலியான் தற்கொலை செய்து கொண்டார். சுத் தேசி ரொமான்ஸ், பி.கே., கேதர்நாத் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமான சுஷாந்த் சிங் ராஜ்புத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.