Categories
பல்சுவை

“தோனி ரிவ்வியூ சிஷ்டம்” இந்த புகழுக்கு….. ஈடு இணை வேறு உண்டா….?

ராட்சஸ புகழ் ஒன்று எழுந்து நிற்கும், ஒலிக்கும் பெயர் அரங்கமே அதிர வைக்கும் எனும் பாடல் வரிகளை நிஜமாக்கியவர் மகேந்திர சிங் தோனி.

தொண்ணூறுகளின் கிரிக்கெட் நாயகன் சச்சின் என்றால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றின் பிதாமகனாக திகழ்கிறார் எம்.எஸ்.தோனி.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி மீது நேர்கொண்ட பார்வைதான் பலதரப்பட்ட ரசிகர்களையும் அவருக்கு பிகிலடிக்க செய்தது.

ஆடுகளத்தின் மூன்றாம் நடுவரின முடிவான டிசிஷன் ரிவ்வியூ சிஸ்டம் எனும் DRSஐ இந்திய ரசிகர்களுக்காக தோனி ரிவ்வியூ சிஸ்டமாக மாற்றிக்காட்டிய வித்தைக்காரர் தான் எம்.எஸ்.தோனி.

போட்டி முடிவு வெற்றியோ தோல்வியோ தோனியின் முகபாவனை என்றுமே வேறுபடாது. 100 சதங்கள் என்ற சாதனை படைத்தவர் அல்ல தோனி. நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்த சாதனைக்கு சொந்தக்காரர் தான் எம்.எஸ்.தோனி.

உலக கிரிக்கெட்டில் வெற்றிகர கேப்டன் தான் எம்.எஸ்.தோனி. பேருக்கு பல கேப்டன்கள் இருந்தாலும் இந்திய அணிக்கு தோனி சிறந்த கேப்டன் தான்.

மொழிகள், நாடுகள் கடந்து ரசிகர்கள் தோனியை கொண்டாட காரணம் ரசிகர்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ரசிகர்கள் ரசிக்கும் தன்னிகரற்ற செல்வன்.

உலக கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திர ஆட்டக்காரர்களையும் தனது செயல்களால் ரசிகர்களாக மாற்றியதே தோனியின் திறமைக்கு சான்று.

எவ்வளவு பரபரப்பான நிலையிலும் நிதானமாக செயல்படுவது ஏனென்றால், கூட்டத்துக்காக ஆட்டத்தை ஆடுபவர் அல்ல தோனி. நாட்டுக்காக ஆட்டத்தை ஆடும் நம்பிக்கை நாயகன் தான் தோனி.

வங்க தேசத்து கிரிக்கெட் ரசிகன் எம்.எஸ்.தோனியின் ஸ்டெம்பிங்ளிருந்து தப்பிக்க ஐ.சி.சி இடம் வழி கேட்டபோது, தோனிக்கு ஸ்டம்ப்பிற்கு பின்னால் இருந்தால் கிரீஸுக்கு வெளியே இறங்க வேண்டாம் என்று சொன்ன சிறப்புக்குரிய உலகின் அதிக ஸ்டெம்பிங் செய்த இந்திய விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி.

கிரிக்கெட்டின் ஆண்டவர் சச்சின் என்றால், கிரிக்கெட்டையே ஆண்டவர் மகேந்திர சிங் தோனி மட்டுமே.

தோனியின் சாதனையை பாராட்டி இந்திய அரசு 2009ல் பத்மஸ்ரீ விருதும், விளையாட்டில் உச்சம் தொட்ட வீரருக்கு வழங்கும் ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதும், 2018 பத்ம பூஷன் விருது அளித்து பெருமைப்படுத்தியது.

இங்கிலாந்தின் தி மால்டு போர்டு பல்கலைக்கழகம் 2011 கௌரவ டாக்டர் பட்டம் தந்து சிறப்பித்தது.

இந்திய ராணுவம் லெப்டினன்ட் கர்னல் பதவியை தோனிக்கு தந்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.

மகி ,கேப்டன் கூல் மற்றும் தல என்று அளவற்ற அன்புடன் ரசிகர்களால்  அழைக்கப்படுபவர் எம்எஸ் தோனி.

கிரிக்கெட் என்பது கடல் என்றால் அதில் எம்எஸ் தோனி இந்திய பெருங்கடல் அதில் ஒரு துளி ஒரே ஒரு துளி நீரை உங்கள் மீது தெளிக்கிறோம்.

 

Categories

Tech |