Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோப்பிற்குள் சுவாமி தரிசனம்…. 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்கள் காணிக்கை…. மதுரையில் பக்தர்களுக்கு கறி விருந்து….!!

மதுரை அருகே தோப்பிற்குள் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தோப்பிற்குள் இலந்தை மரத்தடியில் முத்துப்பிள்ளை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் காணிக்கையாக ஆட்டுக்கிடாய், சேவல்கள் கொடுப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் முத்துப்பிள்ளை அம்மன் கோவில் திருவிழாவிக்கு பக்தர்கள் காணிக்கையாக 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்கள் படைத்தனர் .

இதனைத் தொடர்ந்து அம்மன் முன்பாக வைக்கப்பட்டிருந்த 1000 ம் கணக்கான மல்லிகை பூக்களின் மேல் பெண் சாமியாடி ஒருவர் நாகம் வடிவில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதையடுத்து அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து விட்டு அம்மனுக்கு காணிக்கையாக அளித்த 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்களை சமைத்து அங்கேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. இதனிடையே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அனைவருக்கும் முக கவசம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |