Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தோப்பில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கிராமத்தில் ராஜேந்திரன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான தோப்பில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேந்திரனை அவரது மகன் மனோஜ் குமார் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோஜ் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமறைவாக இருந்த மனோஜ்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். முழு விசாரணைக்கு பிறகு தான் ராஜேந்திரன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.

Categories

Tech |