தோப்புக்கரணம் போடுவது மூளைக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நான் சிறுவயதில் ஏதாவது தவறு செய்தால் பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி தோப்புக்கரணம் போடச் சொல்வது வழக்கம். அதனை நாமும் செய்திருப்போம். அவ்வாறு தோப்புக்கரணம் போட என்ன காரணம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?. தோப்பு கரணம் என்னும் காதுகளைப் பிடித்து உட்கார்ந்து பயிற்சி மூளைக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். காதுகளைப் பற்றி இருப்பதால் மூளை சுறுசுறுப்படையும்.
இந்த பழக்கம் ஆதியில் இருந்தே இந்தியாவில் இருந்தாலும். பிறநாடுகள் சூப்பர் பிரைன் யோகா என்று பின்பற்றுகிறது. தோப்புக்கரணம் போடும் போது மூச்சை இழுப்பதால், நுரையீரல்களின் செயல்பாடு அதிகரித்து உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். அதனால் தினமும் தோப்புகரணம் போடுவது மிகவும் நல்லது