Categories
உலக செய்திகள்

தோற்க போகும் டிரம்ப் கட்சி ? ”கோர்ட் போவேன்” என ஏன் சொன்னார் ? பரபரப்பு தகவல்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான  வாக்குப்பதிவை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்வேன் என ட்ரம்ப்  அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 எலக்டோரல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் 213 வாக்குகளை பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 238 வாக்குகளை பெற்றுள்ளார். ஜனநாயக ,குடியரசு  கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று விட்டதாகவும் ஆனால் பிடன் சதி செயலில் ஈடுபட்டு வருவதால் முடிகள் அறிவிப்பதை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா மக்களை ஏமாற்றுகிறார்கள் , சதி செயல் நடக்க விடமாட்டோம் . சர்ச்சைக்குரிய விதமாக சேகரிக்கப்பட்ட வாக்குகளை எண்ண விடமாட்டோம். இது அமெரிக்க மக்களுக்கு அவமானம் என்றும் கூறியுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் முன்னதாக வாக்கு செலுத்தும் முறையை பயன்படுத்தி மெயில் மூலம் வாக்களிக்க மாகாண அரசு அணுமதித்துள்ளது. மெயில் மூலம் வாக்களித்தவர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ட்ரம்ப்பின் இந்த  கருத்துக்கள் அந்நாட்டில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |