Categories
குத்து சண்டை விளையாட்டு

“தோல்வியடையும் தருவாயில்” கோபத்தில் நியூசி வீரரின்…. காதை கடித்த சக வீரர்…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குத்துச்சண்டை போட்டியின் 91 கிலோ எடை பிரிவில் மொராக்கோ வீரர் யூனிஸ் பல்லாவும், நியூசிலாந்து வீரர் டேவிட் நியிகாவும் மோதினர். அப்போது மொராக்கோ வீரர் தோல்வி அடையும் தருவாயில், ஆத்திரத்தில் நியூசிலாந்து வீரரின் காதை கடித்தார். இதனால் யூனிஸ் பல்லா  தகுதி நீக்கம் செய்யப்பட்டு, டேவிட் நியிகா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 1997 இல் மைக் டைசன் சகவீரரின் காதை இருமுறை கடித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |