Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி…. இதுதான் முக்கிய காரணமா?…. வெளியான தகவல்….!!!!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தனர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். மயங்க் அகர்வால் 52 ரன்களிலும், தவான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 199 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. மும்பை அணியில் அதிரடியாக விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை விளாசி 49 ரன்னில் அவுட் ஆனார். தொடக்க வீரர்களில் இஷான் கிஷன் 3 ரன்னுடனும், கேப்டன் ரோஹித் 28 ரன்னுடனும் (17 பந்துகள், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழந்து வெளியேறினர்.

திலக் வர்மா 36 ரன்னும், பொலார்டு 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து உதான்கட், சூர்யகுமார் யாதவ் இருவரும் களமிறங்கிய போது 12 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக சூர்யகுமார் யாதவ் 43(30) ஆட்டமிழந்து அணிக்கு ஷாக் கொடுத்தார். அடுத்ததாக உனத்கட் 12 ரன்னில் அவுட்டானார். இறுதியில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் 3வது வெற்றி இதுவாகும். மும்பை அணி தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்த போட்டியில் மூன்று முக்கிய காரணங்களால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றதாக கூறப்படுகிறது.

பும்ராவை கொண்டுவரவில்லை :-

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியினர் பவர் பிளே ஓவர்களில் தொடர்ந்து 10 சராசரியுடன் ரன்களை குவித்துள்ளார்கள். அதாவது முதல் ஓவர் முதலே பஞ்சாப் கிங்ஸ் அணியினர் அதிரடி காட்டுவார்கள் என்பது தெரிந்தும் முதல் இரண்டு ஓவர்களில் ரோஹித் பும்ராவை கொண்டுவரவில்லை. முதல் இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் எடுத்த பிறகே பும்ராவை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார். நல்ல மன உறுதியுடன் இரண்டு ஓவர்களில் சிறப்பாக விளையாடிய ஷிகர், மயங்க் இருவரும் பும்ரா ஓவரிலும் 13 ரன்கள் எடுத்து அசத்தினர். ஆனால் முதல் ஓவரை பும்ராவிற்கு கொடுத்திருந்தால் ஆரம்பமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பானதாக இருந்திருக்கும்.

ஓபனர்கள் சொதப்பல் :-

இந்த சீசனில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் சிறந்த துவக்கம் தரவில்லை. ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் இஷான் கிஷன் 6 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தும் இஷான் கிஷன் அதிரடி காட்டாதது, பார்ம் அவுட்டில் உள்ளதை தெளிவுபடுத்துகிறது. ரோஹித் ஷர்மா அல்லது இஷான் கிஷன் பெரிய ஸ்கோர் அடித்திருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.

சூர்யகுமாரின் செய்கை :-

தேவையில்லாமல் சூர்யகுமார் யாதவ் கெய்ரன் பொல்லார்ட் 10(11), திலக் வர்மா 36(20) ஆகியோரை ரன் அவுட் செய்தார். அவர் ரன் அழைப்பை சிறப்பாக செய்யவில்லை. ஆட்டத்தில் இந்த 2 ரன் அவுட்டுகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியை பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |