தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 10 அதிமுக அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். அதன்படி ராயபுரம் – ஜெயக்குமார், ஆவடி- பாண்டியராஜன், மதுரவாயல்- பெஞ்சமின், விழுப்புரம்- சிவி சண்முகம், கடலூர்- எம் சி சம்பத், சங்கரன்கோவில்- ராஜலட்சுமி, திருச்சி கிழக்கு- வெல்லமண்டி நடராஜன், ராஜபாளையம்- ராஜேந்திர பாலாஜி, ஜோலார்பேட்டை- கே சி வீரமணி, ராசிபுரம்- சரோஜா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.