ராஜஸ்தானில் சன்சி நாடோடி சமூகத்தில் திருமணம் முடிந்த பிறகு புது மணப்பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யும் பழக்கம் உள்ளது. இந்த சோதனையில் அவள் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அந்த இளம் பெண் திருமணத்திற்கு முன்பு கண்ணிகழியாமல் இருக்கின்றார் என்பது நம்பப்படும். இந்நிலையில் பில்லிவாரா மாவட்டத்தில் வசித்து வரும் 24 வயதான இளம் பெண் தனது புகுந்த வீட்டார் கொடுமைப்படுத்துகின்றனர் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது தன்னை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனை செய்ததாகவும். அதில் தோல்வி அடைந்ததும் என்னை அடித்து விரட்டி விட்டனர் என்று கூறியுள்ளார். இவருக்கு கடந்த மே பதினோராம் தேதி பகோர் நகரில் திருமணம் நடந்தது. அதே நாளில் இளம் பெண்ணுக்கு உடனடியாக கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டது அதில் அவர் தோல்வியடைந்தார். பின்னர் இரவு வரை மணமகன் வீட்டினர் விவாதம் நடத்தினர்.
பயத்தில் அந்தப் பெண் எதுவும் கூறாமல் இருந்தார். அவரை கணவர் மற்றும் உறவினர் அடித்து கொடுமைப்படுத்தியதும் இளம்பெண் திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் தனது கணவர் வீடர் அடித்துக் கொடுமைப்படுத்தி தன்னை வீட்டை விட்டு துரத்தியுள்ளார் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் பஞ்சாயத்துக்கு வரும்போது பொதுமக்கள் முன்னிலையில் ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் புகாரின் பெயரில் கடந்த சனிக்கிழமை மணமகன் வீட்டார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.