Categories
அரசியல் மாநில செய்திகள்

தோல்வி பயத்தில் தான்…. திமுக அரசு இதை செய்கிறது…. எடப்பாடி குற்றசாட்டு…!!!

ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை  கடந்த அதிமுக அரசு நடத்தியதாகவும், தற்போது வேட்பாளர்களை நிராகரிக்கும் பணியை திமுக மேற்கொண்டு வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர் பொய்யான வாக்குறுதிகளை கூறி, திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் 202 அறிவிப்புகள் நிறைவேற்றியதாக முதலமைச்சருக்கு கூறுவது பொய்யானது என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். அதில் அவர்,”ஊராட்சி ஒன்றிய கவுன்சிலுக்கு போட்டியிடும் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படுகிறது. அதற்கு ஏன் தேர்தல் வைக்க வேண்டும்? தேர்தல் வைக்க வேண்டிய அவசியமில்லை. தோல்வி பயத்தின் காரணமாகவே கழக வேட்பாளருடைய வேட்பு மனு நிராகரிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

Categories

Tech |