கோவையில் நேற்று (பிப்…18) 4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள்-ரவுடிகள் கோவையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அவர்கள் அதிமுக-வினரை தாக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் அங்கு பாதுகாப்பு இல்லை. இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த பலனுமில்லை. தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், காவல்துறையினர் 40 பேரை கைது செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது, ராணுவம் வரக்கூடிய அளவிற்கு எந்த சம்பவமும் கோவையில் நடைபெறவில்லை. தோல்வி பயம் காரணமாகவே கோவையில் அதிமுக-வினர் போராட்டம் மேற்கொண்டனர். ஆகவே ஆதாரத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.