காலணி மற்றும் தோல் தொழில் மேம்பாட்டுக்கொள்கை 2025ம் வருடம் மாா்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். இதற்குரிய உத்தரவை தமிழ்நாடு அரசின் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டாா். காலணி மற்றும் தோல் தொழில் மேம்பாட்டுக் கொள்கையை சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
இக்கொள்கையை செயல்படுத்துவதற்கான உத்தரவை தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டாா். அந்த வகையில் இக்கொள்கை 2022ம் வருடம் ஏப்.1 முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வருவதாகவும், 2025 மாா்ச் 31 வரையிலும் அமலில் இருக்கும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளாா். அதன்படி, மேம்பாட்டுக்கொள்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்துச் சலுகைகளும் 2025 மாா்ச் வரை நடைமுறையில் இருக்கும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.