Categories
மாநில செய்திகள்

தோளில் சுமந்து…. “ஓடிச்சென்று வாலிபரை காப்பாற்றிய ஆய்வாளர் ராஜேஸ்வரி”…. நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க ஸ்டாலின்!!

இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்..

சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த வாலிபர் உதயா கனமழை காரணமாக கல்லறையில் தங்கியிருந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் உதயா உடல் பாதிக்கப்பட்டு அங்கேயே மயங்கி உள்ளார்… அதன் பிறகு அப்பகுதி மக்கள் அவரை அங்கு கண்டு போலீசாருக்கு  தகவல் கொடுத்துள்ளனர்.. இதையடுத்து தகவலறிந்து டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விரைந்து வந்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றினார்..

பின்னர் அந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சற்றும் யோசிக்காமல் உடனே உதயாவை தனது தோளில் தூக்கி வைத்து ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.. காவல் ஆய்வாளர் வாலிபரை தோளில் தூக்கிச் சென்றது காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது..

இந்த காவல் ஆய்வாளரை காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் தோளில் சுமந்து வாலிபரின் உயிரைக் காப்பாற்றிய ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

இந்நிலையில் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை இடர் வரினும் இருள் சூழினும் மனிதநேயம் எனும் மணிவிளக்கின் ஒளி அவற்றைப் போக்கி புது நம்பிக்கையை அளிக்கிறது! உதயா என்பவரின் உயிரைக் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் செயல் அத்தகைய ஒளியே! அவரை நேரில் அழைத்துப் பாராட்டினேன்”. என்று பதிவிட்டுள்ளார்..

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை :

Categories

Tech |