ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான கமல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மாணவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நித்திஷ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் திவ்யா தனது தோழிகளுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு திவ்யா தனது தோழியான ஜானகி உள்பட சிலருடன் கடலில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த ராட்சத அலை திவ்யா மற்றும் ஜானகி ஆகிய இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் ஜானகியை மட்டும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் திவ்யாவை காப்பாற்ற இயலவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு திவ்யாவின் சடலத்தை மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.