Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தோழிகளுடன் பொழுதை கழித்து விட்டு…. வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவிக்கு…. நேர்ந்த துயரம்….!!!!

செங்கல்பட்டு மாநகரில் அண்ணா நகர் பகுதியில் சோனியா என்ற கல்லூரி மாணவி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சோனியா தனது நண்பர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பொழுதை கழித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வண்டலூர் ரயில் நிலையத்திற்கு தனது நண்பர்களுடன் வந்துள்ளார்.

அவருடைய நண்பர்கள் அனைவரும் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்று நடைமுறையில் ஏறிவிட்டனர். ஆனால் உயரம் குறைவாக உள்ள சோனியா நடைமேடையில் ஏற முடியாமல் தவித்துள்ளார். இதனால் சோனியா தண்டவாளத்திலேயே சிறிது தூரம் நடந்து சென்று நடைமேடை தொடங்கும் இடத்தில் ஏறி வருவதற்காக சென்றுள்ளார். அதற்குள் சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் சோனியா மீது மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இதனைக் கண்ட சோனியாவின் தோழிகளும் நண்பர்களும் கதறி அழுது துடித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |