அமெரிக்காவில் தோழியின் தந்தையை இளம்பெண் காதலிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நடாலிநோபிள்(19)என்ற இளம்பெண்ணும் டென்னிஸ் பயிற்சியாளர் பாபி லிண்ட்சே(48)என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் கதை மிகவும் வித்தியாசமானது. இதுகுறித்து நடாலி கூறுகையில் கடந்த 2015ஆம் ஆண்டு பாபியிடம் டென்னிஸ் பயிற்சியாளராக சேர்ந்தேன் என்றும் அப்போது தான் அவரை முதலில் தெரியும் எனவும் கூறினார். மேலும் நானும் பாபியின் மகளும் டென்னிஸ் பயிற்சி பெற்று வந்தோம் என்றும் அதனால் அவளும் நானும் தோழிகள் ஆனோம் எனவும் கூறினார்.
நடாலி தற்போது பாபியை உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன் என்றும் கடந்த ஆண்டு நாங்கள் இருவரும் டேட்டிங் சென்றோம் எனவும் கூறினார். மேலும் எங்களது வயது வித்தியாசத்தால் எங்கள் காதலை அனைவரும் எதிர்க்கின்றனர் என்றும் ஆனால் எங்களின் காதல் மிகவும் புனிதமானது எனவும் கூறியுள்ளார். இதனிடையே பாபியின் மகள்களும் எங்களின் காதலை புரிந்து கொள்ளவில்லை என்றும் ஆனால் அனைவரின் எதிர்ப்பு எங்களை மேலும் நெருக்கமானவர்களாக மாற்றுகிறது நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.