Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியுடன் சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினோதினி தனது தோழியுடன் முடிச்சூர் பெரிய ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |