மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் நந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழன்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வடகரையில் இருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழன் பெண் தோழியான தீபிகா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் லட்சுமிபுரம் அருகே சாலை ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது வண்டலூர் நோக்கி வேகமாக சென்ற லாரி தமிழனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபிகாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான உமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.