ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் வசிக்கும் தன்னுடைய கல்லூரி தோழி ஒருவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த தோழியின் ஆண் நண்பர், 23 வயது பெண்ணை அவரின் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி ஏமாற்றி ஒரு இடத்திற்கு கூட்டி சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு அந்த பெண்ணுக்கு மது ஊற்றி குடிக்க வைத்துள்ளார்.
இதனால் அந்த பெண் மயங்கி விழுந்ததால், அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த நபர் அவரின் மூன்று நணபர்களையும் வரவழைத்து, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த அவர், தன்னை பலாத்காரம் செய்து விட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.