Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தோஷம் கழிக்க திருமணம்”…. ஆபாச படம் எடுத்து மிரட்டும் உதவி காவல் ஆய்வாளர்…. கோவையில் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்துகொண்டு ஆபாச படம் எடுத்து தன்னை மிரட்டி வருவதாக உதவி ஆய்வாளர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ராதாபுரம் அருகே உறுமங்களம்  பகுதியை சேர்ந்த இளவரசி என்பவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை தயாரித்தார். அந்த மனுவில் தனக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஆறுமுக நாயனாருக்கும் கடந்த ஜூன் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வரதட்சணையாக ஒரு லட்சம் ரொக்கமும், 20 பவுன் நகையும் ஆறுமுக நாயனாருக்கு ஐந்து பவுன் நகையும் போட்டுள்ளன. ஆறுமுக நாயனார் இளவரசியின் விருப்பத்திற்கு மாறாக மாத்திரைகளை கொடுத்து உடலுறவு கொண்டுள்ளார்.

மேலும் அதை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும், திருமணம் முடிந்து 14 நாட்கள் மட்டுமே தன்னுடன் இருந்துவிட்டு வேலை நிமித்தமாக கோவை வந்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து லதா என்ற பெண் இளவரசியிடம் செல்போனில் அழைத்து உனது கணவரின் பெண் தோழி எனக் கூறி ஆபாசமாக பேசியுள்ளார். அதே எண்ணிலிருந்து ஆறுமுக நாயனாரு நேரம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உன்னை திருமணம் செய்ய வேண்டியிருந்தது. “நீ ரொம்ப ஆசை படாத, முடிந்தால் எங்கள் வீட்டில் இரு, இல்லையென்றால் உங்கள் வீட்டுக்கு போய் விடு “என மிரட்டியுள்ளார்.

இளவரசியின் தாய் உதவி காவல் ஆய்வாளரின் பெற்றோரிடமும் பேசியுள்ளனர். அவர்களும் தன் மகன் எஸ்பி வரை பதவிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டு அவமானப்படுத்தினார். மேலும் ஜாதகம் சரியில்லை என்பதால் தோஷம் கழிப்பதற்காக தன்னை திருமணம் செய்து கொண்டு முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வேறு திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக கணவர் மீது புகார் அளித்துள்ளார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |