த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிடும் அந்த நபர் யார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றார்கள்.
நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக உள்ளார் த்ரிஷா.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது நல்ல விஷயம். அது குப்பை தன்னாலேயே வெளியேறுவதை போன்றதாகும்” என பதிவிட்டு இருக்கின்றார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் யாரைக் குப்பை எனக் குறிப்பிடுகின்றார் என கேட்டு வருகின்றார்கள். 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் தற்பொழுது தேசிய கட்சி ஒன்றில் இணைய இருப்பதாக செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.