த்ரிஷாவை பேட்டி எடுத்த அஞ்சலி. இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. தற்போது இவர் ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் இவர் ஹீரோயினாக இருக்கும்போது நடிகை அஞ்சலி இவரை பேட்டி எடுத்துள்ளார். அப்போது அஞ்சலி மாடலாக இருந்தார்.
பேட்டியின்போது அஞ்சலி த்ரிஷா உரையாடிக் கொண்டிருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவரும் அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடித்த சகலகலா வல்லவன் திரைப்படத்திலும் இணைந்து நடித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.