த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை கண்டித்து த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் த.மு.மு.க. நகர தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில விவசாய அணி பொருளாளர், மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில துணைச் செயலாளர் உரையாற்றியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க.வினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.