Categories
மாநில செய்திகள்

நகரமா இருந்தா என்ன ? கிராமமா இருந்தா என்ன ? இதான் எங்க முடிவு… அதிரடி காட்டிய எடப்பாடி

அரசைப் பொறுத்த வரைக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் மழை வருகின்ற காலகட்டத்திலேயே மக்களுக்கு எப்படி சிரமம் இல்லாத அளவுக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட இருக்கிறது. ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

மின்சாரம் நிறுத்த நிறுத்தவில்லை என்று சொன்னால் ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து அதில் ஏதாவது வழியில் நடந்து சென்றால் அவர்கள் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விடுவார்கள். ஆகவேதான் இது முன்னெச்சரிக்கை எங்கெங்கெல்லாம் புயலால் பாதிக்கப்படுகின்றதோ அந்த மாவட்டங்களில் மின்சாரத்தை நிறுத்தினோம். பிறகு ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்த பிறகு மின்சாரம் கொடுக்க முடியும்.

நகர பகுதியாக இருந்தாலும் சரி, கிராம பகுதியாக இருந்தாலும் சரி ஆய்வு செய்து அந்த ஆய்வில் ஆய்வில் எங்கேயுமே மின் கம்பம் சாயவில்லை,  கம்பி அறுந்து விழ வில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் மின் இணைப்பு கொடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கின்றோம்.

ஆய்வு செய்யாமல் மின்சாரம் கொடுத்தால், அதன் பிறகு எந்த இடத்தில் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. புயல் கடந்ததும் மின்சாரத்தை கொடுத்திட்டிங்களா  மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதுயெல்லாம் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |