ரேஷன் கடைகளில் முறையாக விற்பனை நடைபெறுகிறதா என மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தியுள்ளார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றதா என்றும், விற்பனை முனைய கருவிகள் முறையாக பயன்படுத்த படுகின்றதா என்றும் ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு குறித்தும், கடைக்கு வரும் பொதுமக்களிடம் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யபடுகின்றதா எனவும் கேட்டறிந்துள்ளார். இந்த ஆய்வில் தேனி தாசில்தார் சரவணபாபு, வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷிப் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்துள்ளனர். மேலும் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களை எச்சரித்து கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.