Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!!

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடத்தை மீட்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்கலாம் என தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு சென்று அந்த மக்களிடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை காலி செய்யுமாறு கூறியுள்ளதோடு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.

ஆனால் ஒரு வார அவகாசம் முடிவடையும் கூட பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை காலி செய்யாததால் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு பணிக்காக போலீஸ் குவிந்தனர். மேலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Categories

Tech |