நகரும் நியாய விலைக் கடைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜீ பேசும் போது , திருவிக நகர் தொகுதியில் உள்ள எஸ்.எஸ்.புரம் பகுதியில் நியாய விலைக்கடை அமைக்க வாய்பில்லை. இதற்கு சொந்தமாக நிலம் வாங்க நிதி ஒதுக்க முடியாது, இது போன்ற பகுதிகளில் அதிக வாடகை கேட்பதால் கூட்டுறவு சங்கத்தால் கொடுக்க முடியவில்லை. எனவே, நகரும் நியாய விலைக் கடைகள் நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம்” என்று பேரவையில் செல்லூர் ராஜு தெரிவித்தார்.