நகரும் மின் கருவிகளை கண்டுபிடித்த அரியலூர் அரசு பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேருக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசாவுடன் இணைந்து செயல்படும் நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளை கண்டுபிடிப்பதற்கான பயிற்சி அளித்து வருகின்றது. அதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் நகரும் விண்கற்களை கண்டுபிடிக்கும் பயிற்சியில் பங்கேற்றனர்.
அதில் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து 40 விதமான நகரும் பொருட்களை கண்டுபிடித்து அறிக்கை அளித்தனர். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் 18 விண்கற்கள் முதற்கட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதற்காக இரு ஆசிரியைகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பலரும் தங்கள் பாராட்டுகளை ஆசிரியைகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.