Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்”…. 11 மணி நிலவரப்படி இவ்வளவு சதவீத வாக்குகள் பதிவு….!!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69 % வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் 17.93 %,  நகராட்சிகளில் 24.53 %, பேரூராட்சிகளில் 28.42 % வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்த அளவாக தாம்பரம் மாநகராட்சியில் 4 மணி நேரத்தில் வெறும் 6.95 % வாக்குகளே பதிவாகியுள்ளன. அதிக அளவாக திருச்சி மாநகராட்சியில் 26.64 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

Categories

Tech |