Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை…. தேர்தல் ஆணையர் அவசர ஆலோசனை…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வார்டு வாரியாக முடிவு அறிவித்தல், கூடுதல் பாதுகாப்பு வழங்குதல், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்தல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |